- தற்போதைய செய்திகள், மஹாபாரதம்

காலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்! தொடர் -1

Spread the love

1.கிருஷ்ணரின் கருணை:

பாரதப் போரில் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்ட அபிமன்யுவின் மனைவி உத்தரை பிரசவ வலியால் துடித்தாள். அவளுக்கு அழகிய ஆண்குழந்தைப் பிறந்தது. அஸ்வத்தாமனின் பிரமாஸ்திரப் பிரயோகத்தால் அது இறந்தே பிறந்தது. பாண்டவர்களின் வாரிசுகள் அனைத்தும் போரில் இறந்துவிட , அருச்சுனனின் பேரன் தான் இனி இந்நாட்டை ஆளும் வாரிசு என நம்பியிருந்தப் பாண்டவர்கள் துடித்தனர். அனைவரும் வேதனையில் துடிக்கக் கிருஷ்ணர் அங்கே வந்தார். உயிரற்ற குழந்தையைக் கையிலெடுத்து,
‘ இப்பாரதப் போரில் நான் இரண்டு பக்கமும் நேர்மையாக நடந்திருந்தால் இக்குழந்தை உயிர் பிழைக்கட்டும் என்று கூறி மாவீரனே! பரீட்சித்து! எழுந்திரு! என்றார் . மறுகணமே குழந்தை உயிர்பெற்று அழுதது.

அனைவரும் ஆனந்தப்பரவசமாயினர். எங்கள் குலக்கொழுந்தைக் காப்பாற்றினாய் கண்ணா! என்றுவணங்கினார் தருமர்.
என் பேரனை உயிர்ப்பித்த நீயே என் தெய்வம் எனக் கண்ணீர் மல்க நன்றி கூறினான் அருச்சுனன்.

பின்னர் தருமர் நாட்டைச் சிறப்புற நாட்டை ஆண்டார். உயிரோடு இருந்தக் கர்ணனின் ஒரு மகனுக்கும் நாட்டைப் பகிர்ந்தளித்தனர். பின்னர் அருச்சுனனின் பேரனான பரீட்சித்துவிற்கு முடிசூடிவிட்டு வைகுண்டம் சென்றனர் பாண்டவர்கள்.

பரீட்சித்துவின் காலத்தில் கலியுகம் பிறந்துவிட்டது. ஆனாலும் கலியுகத்தின் சிரமங்கள் மக்களைத் தாக்காதவாறு நேர்மையாக அரசாண்டார் பரீட்சித்து. அவருக்குப் பின் அவரது மகன் ஐனமேஜெயன் சக்கரவர்த்தியானார்.

இந்த ஜனமேஜெயன் தான்
வியாசரிடம் கேட்கிறார்:
முனிவரே! இத்தனை மகான்கள் , அறிஞர்கள், மாவீரர்கள் இருந்தும் எம்முன்னோர்கள் கொடிய யுத்தம் செய்து அழிந்துப் போயினரே! இதைத் தங்களால் தடுக்க முடியவில்லையா?
பல்லாண்டு காலம் மழையே இல்லாமலும் , புழுபூச்சி , விலங்குகள், பறவையினங்களுக்கும் கூட பேரழிவைத் தந்த இப்பாரதப் போரைப் பெரியோர்கள் நினைத்தால் தடுத்திருக்கலாமே?

சக்ரவர்த்தியின் சந்தேகத்தைத் தீர்க்கப் பாரதப் போர் உருவான விதத்தை விளக்கமாகக் கூறும்படி தனது சீடரான வைசம்பாயனரிடம் கூறுகிறார் வேதவியாசர்.
வைசம்பாயனர் ஜனமேஜெயனுக்குக் கூறுவதாகவே பாரதக்கதைத் தொடங்குகிறது.(Flash back யுக்தியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது வியாசரே)

அணுஆயுதப் போர் நடந்தால் ஏற்படும் அழிவுக்கு நிகராவே பாரதப்போர் வருணிக்கப்படுகிறது. சிவனிடமிருந்துப் பெற்ற தெய்வீக அஸ்திரங்கள் என வருவது தற்கால அணுஆயுதங்களுக்கு நிகரானதாக இருந்திருக்க வேண்டும்.

__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

தொடர்ந்து படிக்க

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *