- தற்போதைய செய்திகள், மந்திரங்கள்

ஸ்ரீராம நாம ஜெபத்தின் மகிமை!! ஜெய்ஶ்ரீராம்!

Spread the love

ஒரு ஊரில் வயதான ஒரு ஏழை பிரம்மச்சாரி இருந்தார். அவனுக்கோ கண்கள் குருடு. ஆனால் ராம பக்தன். அவனுடைய பக்தியினைக் கண்டு இரங்கி ஶ்ரீராமபிரான் காட்சியளித்தான். ‘ஒரே கேள்வியைக் கேட்டு வரம் பெற்றுக் கொள்.

கண்டிப்பாக மறு கேள்வி கேட்கக் கூடாதுதென்றான்.’ ஶ்ரீராமபிரான்.
கிழவனும் சரியென்று ஒப்புக்கொண்டு ஒரே ஒரு கேள்வி கேட்டான்‘ஏழு அடுக்கு மாளிகையில் தங்கக் கரண்டியால் என் பேரன் பாலை குடிப்பதை எனது கண்களால் பார்க்க வேண்டும்..’ என்று ஒரே ஒரு வரம் கேட்டான். வரம் கொடுத்து ராமபிரான் சென்று விட்டான்.

வீடு இல்லாதவனுக்கு வந்து விட்டது மாளிகை. பேரன் பிறக்க வேண்டுமானால், அவன் கல்யாணம் முடிக்க வேண்டும் அல்லவா? கிழவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்?
வர பலத்தால் இளமையும் வந்துவிட்டது. பால் குடிக்கும் கரண்டியே தங்கமானால் எவ்வளவு செல்வம் வரவேண்டும்? அவ்வளவு செல்வமும் வந்துவிட்டது.

பேரனைப் பார்ப்பதற்குக் கண்கள் வேண்டுமல்லாவா?
கண்களும் வந்து விட்டன.
கிழவனுக்கு ராமநாம ஜெபத்தின் மகிமையால் தெளிவான ஒரே கேள்வி கேட்டதின் பயனால், மாளிகை , இளமை, செல்வம், கண்கள், இல்லற வாழ்வு இத்தனையும் பெற்றான்.

பக்தி நெறியிலீடுபட்டால் தெளிவான கேள்விகள் உதயமாகி, அறிவு தெளிவடையும்

ஜெய்ஶ்ரீராம்.

.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *