- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

ஶ்ரீமத்பகவத் கீதையை விமர்சித்தால் போராட்டம் நடக்கும்: H.ராஜா!

ஶ்ரீமத்பகவத்கீதைக்கு எதிராக விமர்சனம் செய்தால் இந்துக்கள் போராட தயங்க மாட்டார்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 புதுக்கோட்டையில், தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு இயக்கம் சார்பில் ஜம்மு – காஷ்மீர் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற H.ராஜா அவர்கள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, அரசியல் சட்ட பிரிவு 370-ஐ திருத்தம் செய்த காரணத்தால்  ஜம்மு-காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியினரும் ஆதரிக்கும் நிலையில், அது குறித்து எதுவும் தெரியாத திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக H.ராஜா விமர்சித்தார்.

மேலும் ஶ்ரீமத்பகவத்கீதைக்கு எதிராக விமர்சனம் செய்தால் இந்துக்கள் போராட தயங்க மாட்டார்கள் என்றும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கீழடி ஆய்வில் இன்னும் ஆழமாக 33 அடி தோணடப்படும்போது இன்னும் பல்வேறு விஷயங்கள் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *