- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

அத்திகிரிவரதர் வரிசையில் 2லட்சம் பேர்!! காலையில் வர போலீசார் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு

Spread the love

அத்திகிரிவரதர் வரிசையில் 2லட்சம் பேர்!! காலையில் வர போலீசார் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு

அத்திகிரிவரதரை தரிசிக்க வரிசையில் 2லட்சம் பேர் காத்திருக்கின்றனர்!! அனைவரையும் நாளை காலையில் வர போலீசார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர் . ஆனாலும் எவரும் திரும்பி செல்வதாக இல்லை. எவ்வளவு நேரம் ஆனாலும் அத்திகிரி வரதரை தரிசித்து விட்டு தான் செல்வோம் என்று காத்திருக்கிறார்கள். சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் மக்கள் வரிசையில் காத்திருப்பு.

அத்திவரதர் நின்ற கோலத்துக்கு மாற்றப்பட்டது முதல் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று அத்திவரதருக்கு இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றும், நேற்று முன்தினமும் தலா மூன்றரை லட்சம் பக்தர்கள் தரிசித்த நிலையில் இன்று மாலை நான்கு மணி நிலவரப்படி 2 லட்சம் பக்தர்கள் தரினம் செய்தனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் நிற்கும் நிலையில் மேலும் ஒரு லட்சம் பேர் காஞ்சிபுரத்தில் ஆங்காங்கே குழுமியுள்ளனர்.

எனவே இன்று 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்திவரதரை தரிசிக்க காலையில் வந்தால் மறுநாள் அதிகாலை 3 மணி வரையும், மாலையில் வந்தால் மறுநாள் பிற்பகல் அல்லது மாலை வரையும் ஆவதால் பக்தர்கள் அதற்கேற்ற முன்னேற்பாடுகளுடன் வருமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே ஆனைக்கட்டித் தெருவில் சிறப்பு தரிசன வரிசையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் நிலையில் தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் சிறப்பு தரிசன வரிசையில் மின் விசிறி உள்ளிட்ட தேவைகளுக்கு தற்காலிக மின் இணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் இன்று மின் இணைப்பில் ஏற்பட்ட திடீர் மின் கசிவால் அதன் அருகில் இருந்தவருக்கு ஏற்பட்ட பாதிப்பு அடுத்தடுத்து நின்ற சுமார் 50 பேரை பாதித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் தடுமாறி விழுந்த முதியவர்கள் 5 பேருக்கு தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மின்சாரத்தை துண்டித்து சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் ரங்கசாமி குளம், நான்குமாடவீதி, செட்டித் தெரு, பெரியார் நகர், கிழக்கு ராஜகோபுரம், தற்காலிகப் பேருந்து நிலையம் உள்ளிட்ட சுமார் 100 இடங்களில் மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள், மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் மற்றும் வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளின் எண்ணிக்கையும் 45-லிருந்து 60-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க வரும் 17-ஆம் தேதி கடைசி நாள் என்ற நிலையில் வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரத்திற்கு வரும் கூடுதல் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்துவது, பக்தர்கள் ஓய்வெடுத்து செல்ல வசதிகள், வயதானோர், மாற்றுத் திறனாளிகள் அமர்ந்து செல்ல வசதிகள், கூடுதல் துப்புரவு பணியாளர்களை சென்னை மாநகராட்சியிலிருந்து அனுப்புவது, கூடுதல் காவலர்களை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் வரும் வரும் 13, 14, 16-ஆம் தேதிகள் உள்ளூர் விடுமுறையும், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *